Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு கலை kaththisoonபண்பாட்டுத்தளத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வியல் அவலங்கள் தென்னிந்திய சினிமாவின் ஊடாகத் திணிக்கப்படும் களியாட்ட நிகழ்ச்சிகளால் மறைக்கப்படுகின்றன. ஈழத்தின் பாரம்பரிய கலை வடிவங்களும் அவற்றின் சுய கலாச்சார வடிவங்களும் தென்னிந்திய வர்த்தக கலாச்சாரத்தின் வன்முறைகளால் அழிக்கப்படுகின்றன.லிபாரா மற்றும் தமிழ்வின் ஆதரவில் விஜை தொலைக்காட்சி புலம்பெயர் நாடுகளில் நடத்திய சுப்பர் சிங்கர் நிகழ்வின் பின்னர் லிபாராவின் ஆதரவில் விஜய்பிரசாத் சின்மாயி போன்ற சினிமா பாடகர்களுடன் மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதே வேளை லைக்கா மோபைல் நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படம் சென்னையில் நிறைவடையும் நிலையிலுள்ளது. வன்முறைக் கலாச்சாரத்தின் குறியீடான இத் திரைப்படம் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் திரையிடப்படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசுடன் வர்த்தக்த் தொடர்புகளைக்கொண்டிருப்ப்தாகக் கருதப்படும் நிறுவனங்கள் ஈழத் தமிழ் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்கும் இலங்கை அரச பாசிசத்தின் நோக்கங்களுக்குத் துணைசெகின்றனவா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.

Exit mobile version