Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்காவின் கத்திபற்றிய சர்ச்சை தேவையற்றது:இயக்குனர் லெனின் சிவம் நீக்கிய காட்சிகள்

leninsivamஇனப்படுகொலை நடைபெற்று ஐந்து வருடங்களுக்கு உள்ளாகவே உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரான ராஜபக்சவின் நிழலில் வியாபாரம் நடத்துவதைக் கண்டுகொள்ளக் கூடாது என்று கூச்சமின்றிக் கூறுமளவிற்கு புலம்பெயர் படைப்பாளிகள் தேய்ந்து போயுள்ளனர்.கன் அன்ட் த ரிங் படத்தைத் தயாரித்த லெனின் சிவம் இத்தேய்வின் முக்கிய உதாரணம்.

ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்புவது தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் விடுதலையைப் பெற்றுத்தராது. அவர் தண்டிக்கப்படாவிட்டால் மனிதகுலத்தின் இன்னொரு பகுதியை இன்னொரு இனக்கொலையாளி அழித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி சுதந்திரமாக உலாவர வழிசெய்யும் என்ற ஒரே காரணத்திற்காகவே மனிதாபிமானிகள் ராஜபக்சவைத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். அது நடைமுறைச் சாத்தியமா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் தண்டிக்கவேண்டும் என்று கோருவது மனிதகுலத்தின் கடமை.

இந்த நிலையில் லைக்கா போன்ற பல்தேசிய நிறுவனங்கள் ராஜபக்சவுடன் நடத்தும் வியாபாரம் அவர்களின் பணவெறிக்கு உதாரணம். இது போன்றே டாட்டா, ஆதித்யா பிர்லா, வேதாந்தா போன்ற பல்தேசிய நிறுவனங்கள் பிணங்களின் மீது பணத்தைச் சுரண்ட இலங்கை அரசுடன் இணைகின்றன.

இந்த நிலையில் லைக்கா லிபாரா என்ற இரண்டு தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்கள் புலம்பெயர் ஊடகத் துறையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. சரி, தவறு என்பதற்கு அப்பால் மக்கள் பணத்தின் ஒரு பகுதியில் செயற்பட்ட ஊடகங்கள் லைக்கா, லிபாராவின் பண வெறிக்குள் ஈர்க்கப்பட்டன.

இதனால் அந்த ஊடகங்கள தமது அரசியல் வலுவை இழந்து வெறும் கேளிக்கை ஊடகங்களாக மாறியுள்ளன.

இச் சூழலில் லைக்கா நிறுவனத்தின் வியாபாரக் குப்பையாகக் கத்தி என்ற திரைப்படம் வெளியாகிறது. தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்களின் தென்னிந்தியக் குப்பைகளின் இறக்குமதி புலம்பெயர் மற்றும் ஈழப் படைப்புகளுக்கு எஞ்சியிருந்த சிறிய இடைவெளியையும் இல்லாதொழித்துள்ளன. லைக்காவிற்கு முன்னரே தென்னிந்தியக் கலை கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிரான எழுத்துப் போராட்டம் இனியொருவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது, தென்னிந்தியாவின் கோப்ரட் கூத்தாடிகளின் வருகைக்கு எதிராக்ப் பல்வேறு கட்டுரைகள் வெளியாகியிருந்தன.

லைக்கா என்பது எமக்கு முன்னால் தெரியும் குறியீடே தவிர லைக்கா மட்டுமே எமது குறியாக முடியாது. புலம்பெயர் மற்றும் ஈழப் படைப்புக்களை வளர்ப்பதற்கான போராட்டத்தில் லைக்கா என்பது எதிர்மறைக் குறியீடு. ஈழப் படைப்புக்களை நோக்கி லைக்காவிற்கு எதிரான உணர்வுகளை உள்வாங்கிக்கொள்வதும் அவற்றை ஈழக் கலைகளை நோக்கித் திசைவழிப்படுத்துவதும் அவசியமானது.

லைக்காவின் கத்திபற்றிய சர்ச்சை தேவையற்றது என்று கூறி லைக்கா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் கலை கலாச்சார அழிப்பு நடவடிக்கைகளை புலம்பெயர் சூழலின் காட்சியிலிருந்து நீக்க முனைகிறார்.

Gun and the ring என்ற திரைப்படத்தின் இயக்குனர் லெனின் சிவம் லைக்காவின் கத்தி குறித்து பேசத்தேவையில்லை என்று கூறியிருப்பது வேடிக்கையானது. அது கண்டிக்கத்தக்கது.

போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள் : ரதன்

Exit mobile version