இவர்ககளை நோக்கியும் இவர்களை முன்னிறுத்தும் இணையங்களை நோக்கியும் சில கேள்விகள். லைக்கா இலங்கை அரசுடன் வியாபாரம் நடத்தும் நிறுவனம் என்பதால் போராட்டம் தேவையானதே ஆனல் அதன் நோக்கம் தவறானதாக அமைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் சில கேள்விகள்:
1. நீங்கள் பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலுக்கு எதிரானவர்களா?
2. நீங்கள் தென்னிந்திய சிரழிந்த கலை கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிரானவர்களா?
3. நீங்கள் ஈழத்தமிழர்களின் முற்போக்குக் கலை கலாசார வளர்ச்சிக்காக உழைப்பவர்களா?
4. நீங்கள் பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை செல்லும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரானவர்களா?
5. லைக்காவின் போட்டி நிறுவனமான லிபாரா நிறுவனத்தின் விளம்பரங்களை உங்கள் இணையங்களிலிருந்து நீக்கத் தயாரா?
6. லிபாரா நிறுவனம் இலங்கை இனக்கொலை அரசின் அனுமதியுடன் பெரும் பணத்தொகையில் கிராம அபிவிருத்தி வேலைகளைச் செய்கிறது. இலங்கை அரச தொடர்பில்லாமல் அது சாத்தியமில்லை. அது குறித்து லிபாராவிடம் கேள்வியெழுப்பத் தயாரா?
7. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுடன் லிபாரா இணைந்து புலம்பெயர் நாடுகளில் களியாட்டங்களை நடத்துவதை வெளிப்படையாகக் கண்டிக்கத் தயாரா.
8. புலிப்பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளரான புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் உரிமையாளர் பாரிவேந்தர் பச்சை முத்துவின் நிறுவனங்களைக் கண்டிக்கத் தயாரா?-பச்சைமுத்துவும் இலங்கையில் வியாபாரம் செய்கிறார்.-
9. தமிழகத்திலேயே கல்வியை விற்பனைப் பொருளாக்கி தமிழனின் கல்வியை அழிக்கும் பச்சைமுத்துவிற்கு எதிராக இயன்ற வழிகளில் போராடவும் அம்பலப்படுத்தவும் தயாரா?
10. லைக்கா லிபாரா ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் நிதிவளத்துடன் இயங்கும் ஊடகங்களைப் புறக்கணிக்கத் தயாரா?
11. லிபாராவின் ஐ.பி,.சி மற்றும் ஐ,எல்,சி வானொலி ஆகியன நடத்தும் தென்னிந்திய சினிமாக் களியாட்ட விழாக்களைப் புறக்கணிக்கக் கோருவீர்களா?