Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லியோ சீமான்பிள்ளையைத் தொடர்ந்து தீமூட்டிக்கொண்ட மற்றொரு தமிழ் அகதி!

மன்னாரைச் சேர்ந்த லியோ சீமான்பிள்ளை தனக்குத்தானே தீமூட்டி மரணித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் மற்றொரு தமிழ் அகதி தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டார். இந்த சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுள்ளது. தமிழ் அகதிகள் சபையின் தகவலின்படி குறித்த அகதி தீமூட்டிக் கொண்ட உடனேயே வீட்டில் இருந்தோர் தீயை அணைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அம்பூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் அவர் இன்று மாலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் அகதிகளுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு, அகதிகளாக அங்கீரிக்கப்பட்டவர்களுக்கும் அகதிகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு. அகதிகளை அழிக்கும் போர்வையில் சாட்சிகளை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு, உலக அளவில் அகதிகளிடயேயான ஒத்துழைப்பு போன்றவையும் அகதிகளுக்கான போராட்டத்தின் பகுதிகளே. இவற்றை முன்வைத்து எதிர்வரும் சனியன்று மேற்கு லண்டன் புறநகர் பகுதியான நோர்பிட்டனில் பொதுக்கூட்டம் ஒன்றை தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு ஒழுங்கு செய்துள்ளது. விபரங்கள்:

Exit mobile version