நாடாளுமன்ற உறுப்பினர் லியாம் பொக்ஸ் உட்பட்ட பிரித்தானிய நாடாளுமன்ற குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
யாழ்ப்பாண குடாநாட்டின் தற்போதைய நிலைமையை ஆராயும் முகமாகவே இந்த விஜயம் அமையவுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிக இராணுவ பிரசன்னம் குறித்து இந்தக்குழு ஆராயவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தாம் அண்மையில் லண்டனுக்கு சென்றிருந்த வேளையில் விடுத்த அழைப்பை ஏற்றே இந்தக்குழு இலங்கை வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக்குழுவில் 10 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விஜயத்துக்கான திகதி அறிவிக்கப்படவில்லை.
லியாம் பொக்ஸ் சட்டவிரோதமான பல நடவடிக்கைகளுக்காக இந்த வருட முற்பகுதியில் பதவி துறந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.