ஐக்கிய நாடுகள் பாதுகப்புச் சபையில் லிபிய தேசிய எண்ணைக் கூட்டுத்தானத்தின் சொத்துக்களை முடக்குவதற்கும், லிபிய மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவதற்குமான வரைவு ஒன்று முன் மொழியப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கடாபியின் தனிப்பட்ட சொத்துக்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. பிரித்தானிய நேரப்படி இன்று 17.03.11 அன்று 10 மணிக்கு முன்மொழியப்படும் இந்த வரைவில் விமானங்கள் பறப்பதற்கான தடைப்பிரதேசங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஏனைய வடிவங்களிலான இராணுவ நடவடிக்கைகளூடாக கடாபியின் இராணுவத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மக்களின் ஜனநாயக மீட்புப் போராட்டத்தின் பலனை அறுவடை செய்து கொள்வதற்கான மேற்கு நாடுகள் பல வழிகளிலும் முயற்சிக்கின்ற போதும், மேற்கின் இனப்படுகொலைகளைப் பலவருடங்களின் முன்னர் முகம் கொண்ட லிபிய மக்களிடமிருந்து அதிகமாக எதனையும் மேற்கு எதிர்பார்க்க முடியாது என்றே எதிர்வு கூறப்படுகின்றது.