லிபிய முன்னாள் அதிபர் கடாபி நேட்டோ ஆக்கிரமிப்புத் துணைப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடாபி ஆதரவு படையினர் வலுவாக இருந்த ஷிர்தே பகுதிக்குள் புகுந்த நேட்டோ துணைப்படையினர் பெரும்பாலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கடாபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறைந்திருந்த மாளிகைக்குள் புகுந்த புரட்சி படையினர், கடாபியை துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாகவும், இதில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்ததாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு சில மணி நேரங்களில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. கடாபியின் இழப்பு அரபுலகில் அமரிக்க ஐரோப்பிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உணர்வை அதிகரிக்கும் எனக்கருதப்படுகின்றது.