Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லிபியா: பலத்த மோதலின் பின்னர் இராணுவத்தினர் சரண்

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்ளிட்ட 3 நகரங்கள் போராட்டக்காரர்கள் வசம் உள்ளது. அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடாபி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நேற்றிரவு ஷாவியா நகரில் கடாபியின் ஆதரவு ராணுவம் திடீரென புகுந்தது. டாங்கிகள், எந்திர துப்பாக்கிகளுடன் அவர்கள் போரில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களும், அவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் ராணுவத்தின் ஒரு பிரிவினரும் பதிலுக்கு தாக்கினர். இதனால் கடும் சண்டை நடந்தது. 6 மணி நேரம் நடந்த போருக்கு பிறகு கடாபியின் ஆதரவு படையினர் பலர் சரண்டைந்துள்ளதாகவும் பலர் தப்பியோடியுள்ளதாகவும் தலவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version