லிபியாவிற்கான அமரிக்க தூதர் பென்காஸி நகரில் கொல்லப்பட்டார். அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் லிபியாவைக் கையககப்படுத்திய ஒரு வருடத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அமரிக்க எதிர்பாளர்களின் ரொக்கட் எறிகணைத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். தனது மூன்று உதவியாளர்களுடன் காரில் பயணித்த போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன என மேற்குலகப் பத்திரிகைகள் குற்றம் சுமத்துகின்றன. லிபிய இணையங்களில் சில தாக்குதலை அமரிக்க எதிர்ப்புப் படைகளின் தாக்குதலாக வர்ணித்துள்ளன.