லிபியாவில் பானிவாலிட் நகரைக் கைப்பற்றிய நேட்டோ துணைப்படை
இனியொரு...
லிபியாவில் பானிவாலிட் நகரின் மையப் பகுதியை நேற்று நேட்டோ ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவுப்படை கைப்பற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடாபி ஆதரவாளர்களை முற்றாக அழித்துவிட்டதாக நேட்டோ படைகள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக மக்கள் பரவலாகப் போராட்டம் நடத்துகிறார்கள். போராடும் மக்கள் கடாபி ஆதரவாளர்கள் என நேட்டொ ஆதரவுப் படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். ஆப்கானிஸ்தானிலும் அதிகமாக கனிம வளங்களையும் எண்னை வளத்தையும் கொண்ட லிபியாவை ஆக்கிரமித்துள்ள நேட்டோ படைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைவதை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.