Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

lycasலைக்கா நிறுவனத்தின் தயவில் ஆதவன் என்ற தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை லைக்காவின் ஆதரவில் ஜி.ரி.வி இயங்க ஆரம்பித்துள்ளது. லைக்காவின் இலங்கை அரசுடனான வியாபாரம் தொடர்பான எதிரொலிகள் இன்னும் ஓயாத நிலையில் ஆதவன் தொலைக்காட்சியின் விளம்பரம் ஐ.எல்.சி என்ற வானொலியில் செய்திகளின் இடையே ஒலிபரப்பாகின்றது.

ஐ.எல்.சி, ஜி.ரி.வி ஆகியவற்றின் தீவிர தமிழ்த் தேசியம் லைக்காவின் தயவில் சக்கை போடு போடுகின்றது.

அதே வேளை தீபம் தொலைக்காட்சியின் பங்குகளை வாங்கியதாகக் கருதப்பட்ட லிபாரா நிறுவனம்உள்வீட்டு இழுபறியால் பங்குகளை மீளப் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

ஐ.பி.சி என்ற வானொலிச் சேவை லிபாராவின் தயவில் இயங்குவதாகக் கருதப்படுகின்றது.இதில் ஆதவன் தவிர ஏனைய ஊடங்கள் நீண்ட காலமாகப் புலம்பெயர் நாடுகளில் செயற்படுபவை. இவை அனைத்தும் கல்தோன்றி மண்ணும் தோன்றி, காரும் பஸ்சும், இரத்தமும் தடையின்றி ஓடித்திரிந்த முன்பொரு காலத்தில் தமிழ்த் தேசிய ஊடகச் சேவைகள் என அழைக்கப்பட்டு புலம்பெயர் நாடுகளில் ‘மக்கள்பணி’ ஆற்றியவை.

இன்றோ ராஜபக்சவின் அன்புக்கும் அதிமதிப்பிற்கும் பாத்திரமான புலம்பெயர் தமிழ்ப் பல்தேசியக் கோப்ரட் முதலாளிகளின் தயவில் தமிழ்த் தேசியப் பணியாற்ற தமது ஊடகக் கதவுகளை அகலத் திறந்து விரித்து வைத்திருக்கின்றன. மக்களின் இரத்தமும் கண்ணீரும் ஊடகங்கள் வழியாக வழிந்தோடி பல்தேசிய வியாபாரிகளின் பணப்பைகளை நிரப்பிக்கொள்கின்றன.

அடுத்து வருகின்ற ‘சனி மாற்றத்திற்குப்’ பின்னர் இலங்கை அரசின் கோத்தாபய கும்பல் தமிழ்த் தேசிய ஊடக வலைப்பின்னலை ஆரம்பித்து வைத்தாலும் வியப்படைவதற்கில்லை.

Exit mobile version