முற்றாக அழிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் ஈழப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ் நாட்டின் இனவாதிகள் கூறும் அதேவேளை இந்திய உளவுத்துறையின் புதிய பொய் உள் நோக்கங்களைக்கொண்டது.
இந்திய அரசும் உளவுத்துறையும் இலங்கையில் மக்கள் மத்தியிலிருந்து இயல்பாகவே எழக்கூடிய போராட்டங்களையும், தமிழ் நாட்டில் உருவாகும் போராட்டங்களையும் திசைதிருப்பிச் சிதைப்பதற்காகவே இவ்வாறான வதந்திகளைப் பரப்பிவருகின்றன.
இலங்கை அரசு முஸ்லிம்கள் மீது நடத்தும் திட்டமிட்ட தாக்குதலுக்கும் இந்திய உளவுத்துறையின் புதிய தலையீட்டிற்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகங்கங்கள் கருத்தாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளன.