Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லயோலா மாணவர்கள் கைது : மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

loyola_studentsமூன்று நாட்களாக உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுபேரை இன்று திங்கள் அதிகாலை காவல்துறையினர் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாநிலமெங்கும் உண்ணாநோன்பு, வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல் என பல வடிவங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம், மாநிலக் கல்லூரி, லயோலா கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை சட்டக்கல்லூரி, திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி தூய வளனார் கல்லூரி, பூம்புகார் கல்லூரி, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி, அரியலூர் அரசுக்கல்லூரி, தஞ்சாவூர் அரசுக்கல்லூரி, என்று பல கல்லூரி மாணவர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவண்ணமிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

Exit mobile version