29.11.2008.
லத்தீன் அமெரிக்க நாடு களில் பயணம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி மெத்வ தேவ், கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளு டனான உறவை வலுப் படுத்துவதற்காக மெத்வ தேவ் இப்பயணத்தை மேற் கொண்டுள்ளார்.
கியூபாவுக்குச் செல்லும் முன்பு அவர் பெரு, பிரே சில் மற்றும் வெனிசுலா வுக்குச் சென்றிருந்தார்.
வெனிசுலா பயணத்தை முடித்துக் கொண்ட மெத்வ தேவ் கியூபாவுக்குச் சென் றார். புரட்சி மாளிகையில் அவர் இரு சந்திப்புக்களை நடத்தினார். ஒரு சந்திப்பில் ராலும், மெத்வதேவும் தனியே பேசினர். மற்றொன் றில் இருவரும் தத்தம் பிரதி நிதிகளுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். மெத்வதேவ் கியூபப் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட் ரோவைச் சந்திப்பாரா என்று அறிவிக்கப்பட வில்லை.
கியூபாவும் ரஷ்யாவும் ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திடப் போவ தில்லை. இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய், நிக் கல், தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் மற் றும் சுற்றுலா ஆகிய துறை களில் ஒப்பந்தங்கள் உள் ளன. ரஷ்ய ஜனாதிபதியின் பயணம் உலக நெருக்கடி யையும் தாண்டி வர்த்த கத்தை பெருக்கும் நோக்கு டன் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
1991-ல் சோவியத் யூனியன் வீழ்ந்த பின் கியூபா செல்லும் இரண்டாவது ரஷ்ய ஜனாதிபதி மெத்வ தேவ். 2000-ம் ஆண்டில் புடின் சென்றார். அதற்குப் பின் ரஷ்ய – கியூப உறவில் விரிசல் ஏற்பட்டது. லூர்ட ஸில் உள்ள ரஷ்ய உளவு மையத்தை மூட புடின் முடிவு செய்ததை அடுத்து ஏற்பட்ட விரிசல் 2007-ல் மீண்டும் புத்துயிர் பெற்றது.
லத்தீன் அமெரிக்காவில் ரஷ்யாவின் முக்கிய கூட் டாளி கியூபா என்று இம் மாதத்தில் மெத்வதேவ் குறிப்பிட்டிருந்தார். 2009-ல் ரால் காஸ்ட்ரோ ரஷ்யா செல்லத் திட்டமிட்டுள் ளார். கியூபாவுடன் எண் ணெய் மற்றும் நிக்கல் துறைகளில் முதலீடுகள் செய்வது குறித்து ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மெக்சிகோ வளைகுடாவில் ஆழ்கட லில் எண்ணெய் வளம் கண் டறிவது குறித்து இரு நாடு களும் ஒப்பந்தம் செய்ய வுள்ளன.
மெத்வதேவ் உடன் வந்த ரஷ்ய அயல்துறை அமைச் சர் லாவ்ரோவ், பிரேசிலில் இருந்து கொலம்பியாவுக் கும், ஈகுவேடருக்கும் சென் றுள்ளார். ஹூ ஜிண் டாவோ, கியூபா சென்று திரும்பிய பின் மெத்வதேவ் கியூபா சென்றுள்ளார்.