17.12.2008.
லத்தீன் அமெரிக்கா மற் றும் கரீபிய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வழக்கமாக அழைக்கப்படும் அமெரிக் காவுக்கு இம்முறை அழைப்பு அனுப்பப்படவில்லை. முதல்முறையாக கியூபா இம்மாநாட்டிற்கு அழைக் கப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாடு பிரேசிலின் கோஸ்டா டோ சாயிபே நகரில் நடை பெறுகிறது.
கியூபாவிற்கு சொந் தமான இடம் இம்முறை வழங்கப்பட்டுள்ளது. இப் போது நாங்கள் முழுமை அடைந்துள்ளோம். நாங் கள் இப்போது ஒரு அணி யாக, நல்ல அணியாக மாறி யுள்ளோம் என்று வெனி சுலா ஜனாதிபதி சாவேஸ் குறிப்பிட்டார். பேரரசின் மேலாதிக்கம் இல்லாமல் நாங்கள் கூடியிருப்பது எங் கள் சுதந்திரத்திற்கு கிடைத் துள்ள சாதகமான அம்சமா கும் என்று அவர் அமெரிக் காவின் பெயரைக் குறிப் பிடாமல் கூறினார்.
இதற்கு முந்தைய மாநாடு களில் லத்தீன் அமெரிக்கா வின் முன்னாள் ஆட்சியா ளர்கள் போர்ச்சுக்கல், ஸ்பெ யின் ஆகியவையும் அமெ ரிக்காவும் கலந்து கொள் வது வழக்கமாகும். இம் முறை இவற்றுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
இம்மாநாட்டில் 20 லத் தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் பங்கேற்றன. இந்நாடுகளின் தலைவர்கள் உலக நிதி நெருக்கடிக்கு செல்வந்த நாடுகளே கார ணம் என்று குற்றம் சாட்டி னர். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கியூபா வின் பங்கேற்பை வரவேற் றனர்.
செல்வந்த நாடுகளுக் கும், பன்னாட்டு நிறுவனங் களுக்கும் பயனளித்து வந்த உலக பொருளாதார அமைப்பு இன்று நெருக்கடியில் சிக்கி நிற்கிறது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அழிவு இது என்று இம் மாநாட்டில் பேசிய கியூப ஜனாதிபதி ரால்காஸ்ட்ரோ குறிப்பிட்டார்.
நடப்பு பொருளாதார அமைப்பின் வக்கிரத்தை தற்போதைய உலகநிதி நெருக்கடி வெளிப்படுத்தி யுள்ளது. இதனால் கடன் வசதிகளும், ஏற்றுமதிப் பொருட்களின் கிராக்கியும் குறைந்துள்ளன. அதன் விளைவாக இப்பிராந்தியம் அடைந்துள்ள சமூகம் மற் றும் பொருளாதார மேம் பாடு அச்சுறுத்தப்பட்டுள் ளது என்று பிரேசில் ஜனா திபதி லூலா சுட்டிக்காட் டினார்.
வளரும் பொருளாதா ரங்களால் இந்த நெருக்கடி ஏற்படவில்லை. ஆனால், அவை பெரும் விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது என்று ஈகுவடார் ஜனாதி பதி ராபெல் கோரியா குறிப்பிட்டார். இந்த நெருக் கடியில் இருந்து பிராந்திய வளர்ச்சி வங்கியை உரு வாக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்
அமெரிக்க ஆயுதத் தொழிற்சாலைகளின் ஆதிக் கத்தில் இருந்து விடுபடவும், பிராந்தியத்தின் உள் முரண் பாடுகளைக் களையவும் தென் அமெரிக்க பாதுகாப் புக் குழு அமைப்பதென்று தலைவர்கள் முடிவு செய் துள்ளனர்.