சில ஆண்டுகள் கியூப அரசில் முக்கிய பதவிகளை வகித்த சே, அவற்றைத் துறந்து ஏனைய நாடுகளில் புரட்சி செய்யும் நோக்கோடு பயணிக்கிறார். கொங்கோ கீனேசியா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளுக்குப் பயணித்து புரட்சி இயக்கங்களைத் தோற்றுவிக்கிறார்.
1967 ஆம் ஆண்டு பொலிவியாவில் சீ.ஐ.ஏ இனால் கைது செய்யப்பட்ட சே அவர்களால் கோரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார்.
பொலிவிய சீ.ஐ.ஏ உளவாளியான பிலிக்ஸ் ரொட்ரிகேஸ் என்பவரால் சே கைது செய்யப்பட்டார். சிமேயோன் கியூபா சரபியா என்பவரால் தலமை தாங்கப்பட்ட கெரில்லாப் பிரிவுடன் கைதான சே உள்ளூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படிகிறார். சித்திரவதைகளுக்கு மத்தியில் பேசுவதற்கு மறுக்கிறார். உள்ளூர் பாடசாலை ஆசிரியர் ஒருவருடன் மட்டுமே பேச அனுமதி கேட்கிறார். அவர் மட்டுமே சே கைதானதற்கு ஒரே சாட்சி. சே கைதான பின்னர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பதை சீ.ஐ.ஏ உம் போலிவிய அரசும் பல ஆண்டுகள் மறுத்துவந்தன.
சே கைதான இரண்டு நாட்களின் பின்னர் அவரது உடலின் ஒன்பது இடங்களில் சுடப்பட்டு இறந்துபோனார்.
சோவியத்தில் குருச்சேவின் பிற்போக்கு ஆட்சி அந்த நாட்டின் புரட்சியை அழித்த போது மா ஓ சே துங்கை சே வெளிப்படையாக ஆதரித்தார். 1964 ஆம் ஆண்டு சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட சே மாவோயிச சிந்தனைகளை ஆட்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
பல புரட்சிகர அமைப்புக்களின் இராணுவ வழிமுறைகளில் சே இன் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. சே எழுதியது போன்ற நூல் ஒன்றை 70 களில் சீ.ஐ.ஏ வெளியிட்டது.
கியூபாவில் வெற்றிபெற்ற இராணுவ வழிமுறை அந்த நாட்டின் குறிப்பான சூழலின் அன்றைய நிலைமைக்கு மட்டுமே பொருந்தியது என்ற கருத்து மாற்றம் சே இன் இறுதிக் காலங்களில் ஏற்பட ஆரம்பித்திருந்தது. மாவோயிசத்தின் மீதான சே இன் ஈர்பிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம்.