Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டன் நகரக் குப்பைத் தொட்டிகளில் உளவு பார்க்கும் கருவி

london_trash_binஇன்றைய சமூக அமைப்பு பெரும்பான்மையான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் மக்கள் அதற்கு எதிராகப் போராடுகின்றனர். புதிய சமூக அமைப்பையு புதிய உற்பத்தி முறைகளையும் கொண்ட சமூக மாற்றத்திற்காக மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை பல்வேறு வழிகளில் மேற்கொள்கின்றன. சொந்த மக்களையே உளவு பார்த்த அமரிக்க அரசின் நடவடிக்கைகளை எட்வார்ட் சினோடென் மக்களுக்குக் தெரியப்படுத்தினார்.

அரசுகளுக்கு சாமன்ய மக்களின் நடவடிக்கைகள் குறித்த நுண்ணிய தகவல்களை வெளிப்படுத்தும் பல நிறுவனங்கள் முளைத்துள்ளன. தரவுகளைப் பல வழிகளில் சேகரிப்பதும் அவற்றை மில்லியன்கள் பெறுமதியான பணத்திற்கு விற்பனை செய்வதும் பல்தேசிய நிறுவனங்களின் முக்கிய செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது.

முக நூல் மற்றும் தேடு பொறி போன்றவற்றில் ஆரம்பித்த இந்தவகையான உளவு வேலைகள் ஐரோப்பிய அமரிக்க நாடுகள் முழுவதும் புதிய தொழில் நுட்பங்களைப் பய்ன்படுத்தி விரிவடைந்துள்ளன.

நவீன கைத் தொலைபேசிகளிலிருந்து வெளியாகும் சமிக்ஞைகளை கண்காணிப்பதற்காக ‘Renew London’ என்ற நிறுவனம் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்திய தகவல் லண்டனில் வெளியகியுள்ளது.

கைத் தொலைபேசியின் தனியான இலக்கமாகக் கருதப்படும் MAC address என்பதை உள்வாங்கிப் பதிவு செய்துகொண்டு அவற்றைப் பயன்படுத்தி தகவல்களைத் திரட்டும் வசதி உள்ள கருவிகள் இந்தக் குப்பைத் தொட்டிகளில் பொருத்தப்பட்டிருந்தன. லண்டன் முழுவதும் 200 வரையான நவீன குப்பைத் தொட்டிகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.

கைத் தொலைபேசி உரிமையாளரின் தகவல்களை அறிந்து அவருக்கு ஏற்ற விளம்பரங்களை அனுபுவதற்காகவே தாம் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

இந்த உளவு வேலை கண்டுபிடிக்கப்பட்டதும் லண்டன் நகரின் நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை அகற்றுமாறு குறித்த நிறுவனத்தைக் கோரியுள்ளதாகத் கூறுகிறது.

Exit mobile version