லண்டன் அமெரிக்க தூதரகம் முன்பாக சனிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான அழுத்தம் வழங்கும் போராட்டங்கள் இன்றைய சூழலில் அவசியமானதே.
இன்னொரு தடவை புலிக்கொடிகளோடு இலங்கை அரசை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப்போராட்டம் நடைபெறுமா என்பது கேள்விகுரிதாகவே உள்ளது.
12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இப் போராட்டம் நடைபெற உள்ளது.
இடம்: 24 Grosvenor Square
London,
W1A 1AE
காலம் 22.01.2011
நேரம்: மதியம் 12.00 மணி முதல் 4 மணிவரை
போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஒழுங்குகளின் விபரங்களிற்கு:- 07405691677.