Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனி்ல் நேரு சிலையை இலங்கைத் தமிழர்கள் உடைக்கவில்லை :தூதரகம்

10.04.2009.

லண்டன்: லண்டன் இந்தியத் தூதரகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவின் சிலையின் தலை இலங்கைத் தமிழர்களால் உடைக்கப்பட்டதாக வந்த செய்திகளை தூதரகம் மறுத்துள்ளது.

சிலை தானாகவே விழுந்து உடைந்ததாக தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி லண்டனி்ல் 4 நாட்களாக இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இந்தியா ஹவுசில் வைக்கப்பட்டிருந்த நேரு சிலையின் தலை உடைந்திருந்தது.

இதை புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் தான் உடைத்ததாகவும், அங்கிருந்த குளோஸ் சர்க்யூட் கேமராவை திருப்பி வைத்துவிட்டு இந்தச் செயலை அவர்கள் செய்துள்ளதாக  பல இந்திய செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டின.

ஆனால், சிலையை யாரும் உடைக்கவி்ல்லை என்றும் அது தானாகவே சரிந்து உடைந்துவிட்டதாகவும் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் சுபாஷினி விளக்கமளித்துள்ளார்.

சிலையின் மார்புப் பகுதி அதன் அடித்தளப் பகுதியில் இருந்து சரிந்துவிட்டது. இதில் யார் மீதும் எங்களுக்கு சந்தேகமில்லை. இதை யாராவது உடைத்ததாக யாரிடமாவது ஆதாரமிருந்தால் அதை எங்களிடம் தரலாம் என்றார்.

ஆனாலும் இது குறித்து லண்டன் போலீசார் குறித்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

தூதரகம் அமைந்துள்ள இந்தியா பேலசின் விசா அலுவலகம் முன்னே 20 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சிலை நிறுவப்பட்டது.

Exit mobile version