இலங்கையில் ராஜபக்ச இனக்கொலை அரசுடன் பெற்றோலிய அகழ்விற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வேதாந்தா என்ற பல்தேசிய நிறுவனம் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து அழித்து வருகின்றது. ஆபிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை அழித்தும் சுரண்டியும் சிதைத்து வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக அந்த நிறுவனத்தின் லண்டன் தலைமையகம் முன்பாக பான் ஆபிரிக்கன் நிறுவனம் நேற்று வெள்ளியன்று போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியது, பான் ஆபிரிக்கன் நிறுவனத்துடன் சில தமிழ் இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அவர்கள் நிறுவனத்தின் முன்பாக தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறை வாத்தியம் இசைத்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தை இணைந்து ஏற்பாடு செய்திருந்த தமிழ் இளைஞர்கள் இலங்கையில் வேதாந்தாவின் நடவடிக்கைகள் தொடர்பாக உரையாற்றினர்.