| இன்று மாலை பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான 10 டவுனிங் வீதிக்கு முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். |
| இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் பிரித்தானியப் பிரதமரின் வாசல் ஸ்தலத்திற்கு முன்பாகவே இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது.
சிங்களவர்களால் இன்று இலண்டனில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தை தடுத்து நிறுத்து முகமாக அப்பகுதிக்கு சென்ற தமிழ் இளைஞர் அப்பகுதியில் எரிபொருளை ஊற்றி தீயிட்டு குளிக்க முயற்சி செய்த போது அப்பகுதியில் இருந்த பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கபட்ட இளைஞனை உடனடியாக பொலிஸார் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். |