
சம்பவத்தை நேரில் கண்ட இளைஞர் ஒருவர் கொலையாளிகள் தப்பிக்க நேரமும் வாய்ப்புக்களும் இருந்த போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்காக அங்கேயே காத்திருந்தனர் என்று கூறினார். சில நிமிடங்கள் தாமதமாக அங்கு சென்ற போலிசார் அவர்களைச் சுட்டுக்கொன்றனர். மற்றொரு கொலையாளி அங்கிருந்த பெண்ணுடன் பேசும் போது, உங்களது படைகளை திரும்பப் பெறச்சொல்லி அரசாங்கத்திடம் கோருங்கள், நாங்கள் எல்லோரும் அமைதியாக வாழலாம் என்றார்.
இத்தாக்குதலின் பின்னர் வட கிழக்கு இங்கிலாந்தில் இரண்டு மசூதிகள் நிற வெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வாசகங்களைச் சுவர்களில் பொறித்துச் சென்றனர்.
கிழக்கு லண்டனில் எசெக்ஸ் மற்றும் கென்ட் ஆகிய பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் நிறவெறி அமைப்பான English Defence League (EDL) திங்களன்று பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளதுள்ளது.