Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்: அகதிகளையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் பாதுகாப்போம்!

refugeesprotest1அவுஸ்திரேலிய அரசால் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அகதிகள் நடுக்கடலில் வைத்து புலிகள் என அடையாளப்படுத்தி சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என தமிழ் அகதிகள் ஆணையகம் உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவால் அகதியாக அங்கீகாரம் பெற்றவர் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலுள்ள மனிதாபிமானிகள், ஜனநாயாக சக்திகளுடன் கைகோர்த்து தமிழ் சமூகம் ஏகோபித்த குரலில் இதனை எதிர்க்கவேண்டும். எதிர்ப்புக்கள் இல்லையெனின் அவுஸ்திரேலியாவை முன்னுதாரணமாகக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் தமிழன் மீதும் அரசுகள் தமது கோர ஒடுக்குமுறையக் கட்டவிழ்த்துவிடும்.

இவற்றையெல்லாம் நாம் மௌனமாகப் பார்த்துகொண்டிருக முடியாது. நாம் விழிப்புடன் இருக்கிறோம் என உலகிற்குக் காட்டுவது இன்று எமது கடமை! ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் (UNHCR) ஆபத்திலுள்ள அகதிகளைப் பொறுப்பெடுக்கக் கோருவோம்!! அறிக்கைகள் மட்டும் விடுத்துவிட்டு அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இனியும் எங்களை ஏமாற்ற முடியாது என்று உரக்கக் கூறுவோம்!!!

லண்டனில் அருகருகே அமைந்திருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகம் மற்றும் UNHCR இற்கு முன்பாக நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்.

இனக்கொலை அரசை நோக்கி அப்பாவி அகதிகளைத் திருப்பியனுப்புவதை நிறுத்த அணிதிரள்வோம்.

Protest on Monday the 7th of July 2014 @4PM in front of Australian high commission and UNHCR which is next to it. Australia House, Strand, London WC2B 4LA, Nearest Tube Temple. Contact: 020 3752 3889
-தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு

Exit mobile version