Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லசந்த விக்ரமதுங்கவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

09.01.2009.

சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது

இன்று நண்பகல் 12 மணிக்கு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கூடிய ஊடக, அரசியல், சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் லசந்தவின் படுகொலையைக் கண்டித்தும், சிரச ஊடகம் மீதான தாக்குதலைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்து கோஷமெழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்,சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரின் கொலையைக் கண்டித்ததுடன், அதற்குக் காரணமானவர்களை அரசாங்கம் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன, தயாசிரி ஜயசேகர, ஜோசப் மைக்கல் பெரேரா, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், இடதுசாரிக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரரைக் கட்டுப்படுத்துமுகமாக பொலிசார் கலகமடக்கும் பொலிஸாரை அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தியிருந்ததுடன், லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்திற்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

 

Exit mobile version