சாட்சி தொடர்பில் இரகசியங்களைப் பேணுவதற்கான தேவையுள்ளதாக கல்கிசை நீதிமன்ற நீதவான் ஹர்ஷ ஹேதுங்கவிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.
லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ராஜகிரியவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பிரபல ஊடகவியலாளரான லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.