பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் மனைவி அயோமா ராஜபக்ச நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட நன்கொடை தொடர்பில் பத்திரிகை வெளியிட்ட தலைப்பு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு துறையினரின் இந்த விசாரணை காரணமாக லக்பிம ஆசிரியர் அசௌகரியங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தமது சங்கத்தை பொறுத்தவரையில் அதிகாரத்துவத்தின் ஆணையின்படியே குற்றப் புலனாய்வுத் துறையினர் இந்த விசாரணையை நடத்தியுள்ளதாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் அனைத்து அரசாங்கங்களும் பத்திரிகையாளர்களை பயமுறுத்துவதற்கு அரச இயந்திரத்தை பயன்படுத்துவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.