Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து ஆலோசனை:சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அறிவிப்பு .

13.10.2008.

சவூதிஅரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூதூரைச் சேர்ந்த றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மரணமான குழந்தையின் தந்தையரான நயீப் ஜெஸியன் ஹலால் அல் ஒட்டாவ தெரிவித்துள்ளதாக அந் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் அப்துல் அஜீத் மொஹமட் மர்லின் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சவூதியின் “டவ் அட்மி’ உயர் நீதிமன்றத்தில் றிஷானாவின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தில் மரணமான குழந்தையின் தந்தை ஆஜர?வதற்கு முன்னர் இத்தகவலை தனது சட்டத்தரணியூடாக தெரிவித்ததாக தூதுவர் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளின்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட றிஷானா விடுதலை பெறமுடியும்.

மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட 19 வயதான றிஷானா நஜீப் கடந்த 2005 ஆம் ஆண்டு சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய வேளையில் 4 மாதக் குழந்தையொன்றை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

 

Exit mobile version