Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ர‌ஷ்ய அதிபர் மெ‌க்ததே‌வ் இ‌‌ன்று இ‌ந்‌தியா வந்து சேருகிறார்

டெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெறு‌ம் உச்சி மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக ர‌ஷ்ய அதிபர் மெ‌க்ததே‌வ் இ‌‌ன்று இ‌ந்‌தியா வந்து சேருகிறார்.

உச்சி மாநாட்டின் 10வது ஆண்டு நிறைவையொட்டியும், 11வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் ர‌‌ஷ்ய அதிபர் மெ‌க்தவேவ் இன்று மாலை டெல்லி வந்து சேருகிறார். அவருடன் தொழில் அதிபர்கள், வர்த்தக முன்னோடிகள், வங்கித்துறையினர், முக்கிய துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களும் வருகிறார்கள்.

மெ‌க்ததே‌வ் அதிபரானதற்கு பின்னர் இந்தியா வருவது இது 2வது முறையாகும். கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சில நாட்களில் அவர் முதன் முதலாக இந்தியா வந்தார்.

இந்த 11வது உச்சி மாநாடு டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங்கும், ர‌‌‌ஷ்ய அதிபர் மெ‌க்ததே‌வு‌ம் முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

புவியியல், தீவிரவாதம் மற்றும் அரசியல் சவால்களை இரு நாடுகளும் எதிர் கொள்வது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

மாநாட்டில், இரு நாடுகளின் நல்லுறவையும், நட்புறவையும் வலுப்படுத்துவது, வர்த்தக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, சர்வதேச கடற்படை செயற்கைக் கோள் தகவல் பரிமாற்றம், 5ஆம் தலைமுறை போர் விமானத்தை இணைந்து உருவாக்குவது, போர் ஒத்திகை, ஆயுத பரிமாற்றங்கள், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை கட்டுவது உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

Exit mobile version