கிகாலி, மார்ச்.1-
1993-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் 100 நாட்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான துத்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவ ஆதரவு பாதிரியாராக இருந்த இமானுவல் ருகுண்டோ என்பவரிடம் அடைக்கலம் தேடி ஏராளமான துத்சி மக்கள் வந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் தருவதற்கு பதிலாக அவர்களை கடத்துவதற்கு ருகுண்டோ உதவியதோடு, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரமும் செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை ஐ.நா. சபையின் போர் குற்றங்களுக்கான சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வந்தது. நேற்று இந்த நீதிமன்றம், கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட பாதிரியார் ருகுண்டோவிற்கு 25 வருட ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.