1994ஆம் ஆண்டில் ருவாண்டா இனப்படுகொலையுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக தலைநகர் கிகாலியின் முன்னாள் மேயருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடனான ருவாண்டா தீர்ப்பாயம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இனப்படுகொலை, கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளிலேயே முன்னாள் மேயர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
சுமார் எட்டு லட்சம் பேர் வரையான டூட்சி மற்றும் மிதவாத ஹூட்டு இன மக்களின் படுகொலைச் சம்பவங்களில் இவர் முக்கிய பங்கு வகித்திருந்ததாக வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.