அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் அங்கிருந்து பொலிஸ் தலைமையகத்தைச் சென்றடையவுள்ளது. அத்துடன், பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டமொன்றை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறிய உதுல் பிரேமரட்ன, மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வந்து கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வழியில் வைத்து பொலிஸாரினால் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் மேலும் கூறினார்.