Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரிசானா கொலைசெய்யப்பட்ட பின்னரும் மக்களை ஏமாற்றிய இலங்கை அரசு

rizanaசவுதி அராபியாவில் பணிப்பெண்ணாக இருந்தபோது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சவுதி அராபியாவில் உள்ள தூதுவரை உடனடியாக நாட்டுக்கு மீள அழைப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதும் அந்த தூதுவர் நேற்று (20) வரையிலும் சவுதி அரேபியாவில் பணியாற்றிய வண்ணம் இருந்துள்ளார்.
ரிசானா நபீக் கடந்த 9 ம் திகதி சவுதி அரேபிய த்வாரம் நகர சிறைச்சாலையில் சிரச் சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இலங்கை தூதுவர் அஹமட் ஜவாட்டை உடனடியாக இலங்கைக்கு திரும்புமாறு அரசாங்க தரப்பு அறிவித்திருந்தததாக வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று செயலாளர் கருணாதிலக்கவிடம் வினவியபோது, இதுவரை குறித்த இலங்கைத் தூதுவர் நாடுதிரும்பவில்லை என குறிப்பிட்டார்.
ரிசானா சிறையிலிருந்த வேளையில் அவரது விடுதலைக்காக எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காத இலங்கை அரசு அவர் கொலை செய்யபட்ட பின்னரும் மக்களை ஏமாற்றி வருகிறது.

Exit mobile version