மட்டக்களப்பு நகரப் பகுதியில் வைத்து ரிஎம்விபி உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
நாவற்காட்டைச் சேர்ந்த 26 வயதான திருமாள் சிவனேசன் (சரத்தீசன்) என்பவரே சுட்டுக் கொல்லபட்டவராகும். இவர் அலுவலகத்தில் இருந்து அருகிலுள்ள மருந்துக் கடை ஒன்றுக்கு செல்லுகையிலேயே ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையில் குண்டுகள் பாய்ந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.