Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரிஆர்ரி தமிழ்அலை உதயகுமாருக்கு புலிகள் கொலைப்பயமுறுத்தல்.

19.02.2009.

பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்னணி அறிவிப்பாளரும் அரசியல்அரங்கம் நிகழச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர்.
நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத புலி  உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும் என்று அவரது கணவரிடம் தெரிவிக்குமாறும் கூறிச் சென்றுள்ளனர்.
ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக்கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று திருமதி உதயகுமாரிடம் இந்த புலிகள் கூறிச்சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக டிரான்சி பொலிசில் உதயகுமார் தரப்பில் முறையிடப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகின்றது.

Exit mobile version