Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரால் காஸ்ட்ரோ முதல் வெளிநாட்டுப் பயணமாக வெனிசுலா:சாவேஸ் ஆரத் தழுவி வரவேற்ப்பு!

14.12.2008.

கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ சனிக்கிழமை யன்று வெனிசுலா தலைநகர் காரகாஸ் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ஆரத் தழுவி வரவேற்றார்.

பிடல் காஸ்ட்ரோ வய தின் காரணமாக ஓய்வு பெற் றுவிட்டார். அதையடுத்து அவருடைய சகோதரர் ரால்காஸ்ட்ரோ இவ்வாண் டின் தொடக்கத்தில் கியூபா ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கியூபா ஜனாதிபதியான பின் ரால் காஸ்ட்ரோ முதல் வெளிநாட்டுப் பயணமாக வெனிசுலா சென்றுள்ளார்.

கியூபப் புரட்சியின் கள நாயகர்களில் ஒருவரான ரால்காஸ்ட்ரோவை வர வேற்பதில் வெனிசுலா பெரு மை அடைகிறது என்று விமான நிலையத்தில் அளிக் கப்பட்ட வரவேற்பில் சாவேஸ் குறிப்பிட்டார். 1959ல் கியூ பப் புரட்சி வென்ற பின் பிடல் காஸ்ட்ரோ முதலில் வெனிசுலாவுக்கு வந்தார் என்பதை நினைவு கூர்ந்த சாவேஸ், பிடல் வருகையின் பொன்விழா ஆண்டில் ரால் வெனிசுலா வந்துள்ளார் என்று சாவேஸ் சுட்டிக் காட்டினார்.

கியூபப் புரட்சியின் தள பதிகளில் நீங்களும் ஒருவர். உங்களுடைய வருகை எங் களுக்கு பெருமை அளிக்கி றது. உங்களை வரவேற்ப தன் மூலம் பிடல் காஸ்ட் ரோவையும் கியூப மக்க ளையும் வரவேற்பதாக சாவேஸ் தம் உரையில் கூறினார்.

ரால்காஸ்ட்ரோ தமது மாணவப் பருவத்தில் வெனி சுலா வந்ததையும், வந்தவு டன் முதல் பணியாக வெனி சுலா விடுதலை வீரன் சைமன் பொலிவார் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தி யதையும் ரால்காஸ்ட்ரோ நினைவு கூர்ந்தார். இப்போ தும் அவருக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக் குறிப்பிட்ட ரால் காஸ்ட்ரோ கியூப மக்களின் அன்பு களையும், காஸ்ட்ரோவின் நல்லெண்ணங்களையும் தமது குழு கொண்டு வந் துள்ளதாக கூறினார்.

உலகப் பொருளாதார நெருக்கடி குறிப்பாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். ரால் காஸ்ட்ரோ வருகைக்கு முன் பாகவே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் விளை யாட்டு உள்ளிட்ட 300 கூட் டுத் திட்டங்களை இருவ ரும் அறிவித்துள்ளனர். இவற்றில் கியூப நிபுணர்கள் தொண்டாற்றுவார்கள்.

சைமன் பொலிவாரின் கல்லறையில் இருவரும் அஞ்சலி செலுத்த உள்ள னர். அதையடுத்து அரசியல் ரீதியான விவாதங்களை இருவரும் நடத்த உள்ளனர். ரால்காஸ்ட்ரோ இருநாள் வெனிசுலா பயணத்தை முடித்தபின் பிரேசிலில் டிசம்பர் 16ல் நடைபெற உள்ள லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற் கச் செல்கிறார்.

Exit mobile version