Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியும்விரட்டியடித்தனர்.
இந்திய மீன்பிடிப் பெரு நிறுவனங்களின் அதி நவீன மீன்பிடி முறைகளால் இலங்கை ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இதே வேளை இலங்கையில் மீன்பிடித் துறையில் நோர்வே நிறுவனங்கள் முதலீடுகளை ஆரம்பித்துள்ளமை அவர்களை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. இந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கை அரசு இலங்கை இந்திய அப்பாவி மீனவர்களிடையே முரண்பாடுகளை திட்டமிட்டு ஆழப்படுத்தி வருகின்றது. இலங்கை இந்திய ஏழை மீனவர்களிடையேயான பொது ஒத்துழைப்பு ஒன்று உருவாக்கப்படுவதன் ஊடாகவே இலங்கை இந்திய அரசுகளின் சதிகளை முறியடிக்க முடியும்.

Exit mobile version