Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தக்கபட்டனர்

க‌ச்ச‌‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை கடுமையாக தா‌க்‌கிய இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் , வலைகளை அறு‌த்து‌ம், ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து‌ம் செ‌ன்று‌ள்ள ‌நிக‌ழ்‌வு ‌மீனவ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம் கொ‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம், ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த 2,600 ‌மீனவ‌ர்க‌ள் 400 படகுக‌ளி‌ல் கடலு‌க்கு நே‌ற்று ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே அவ‌ர்க‌ள் ‌மீ‌‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது 4 படகுக‌ளி‌ல் இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் அ‌ங்கு வ‌ந்தன‌ர்.

‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ‌மீனவ‌ர்களை ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் க‌ற்களை ‌வீ‌சி தா‌க்குத‌ல் நட‌த்‌தியதோடு உரு‌ட்டு‌க் க‌ட்டையா‌ல் அடி‌த்து து‌ன்புறு‌த்‌தின‌ர்.

இ‌தி‌ல் சேசு, ஆரோ‌க்‌கிய‌ம் எ‌ன்ற ‌மீனவ‌ர்க‌ளு‌க்கு பல‌த்த காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படகுக‌ளி‌ல் உ‌ள்ள வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌மீ‌ன்களையு‌ம் கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்றன‌ர்.

உ‌யிரு‌க்கு பய‌ந்து இ‌ன்று காலை கரை ‌திரு‌ம்‌பிய ‌மீனவ‌ர்க‌ள், படுகாய‌ம் அடை‌ந்தவ‌ர்களை ராமே‌ஸ்வர‌ம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌த்தன‌ர்.

இதே வேளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிற்குக் மீனவர் மீதான தாக்குதல் குறித்துக் கடிதம் வரைந்துள்ளார்.
தொடர்ச்சியாக நடைபெறும் இத் தாக்குதல்களின் பின்னால் அரசியல் உள் நோக்கங்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Exit mobile version