ராமேஸ்வரத்தில் சுமார் 5000 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இறால் மீனுக்கு தனியார் குறைவாக விலை நிர்ணயம் செய்வதாக, மீனவர்கள் புகார் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறால் மீன்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நேற்று முதல் படகுகள் அனைத்தும் கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 2-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்த போராட்த்தால் ராமேசுவரம் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
பல் தேசிய நிறுவனங்கள் இறால் ஏற்றுமதியில் பல மில்லியன்களை சம்பாதித்துக் கொள்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒரு கிலோ இறால் ரூபா 2500 வரை விற்பனையாகிறது.