கடந்த 4-ந்தேதி இந்திய- இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றபோது 4 போர்கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எங்களது படகுகளை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
இனிமேல் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க இலங்கை எல்லைக்குள் வந்தால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என இலங்கை கடற்படை வீரர்கள் எச்சரித்தனர். இதனால் நாங்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரை திரும்பினோம்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கே இவ்வாறு எச்சரிக்கைவிடப்பட்டது.