ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக்க அறிவிக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசு வரும் 29-ம் தேதிக்குள் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என உச்சநீnullதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உச்சநீnullதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மக்கள் பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்காக சமூகப் பொருளாதார ஒடுக்கு முறைக்குள் உட்படுத்தப்பட்டுள்ள அவல நிலையில் ஜெயலலிதாவின் இந்தக் கேலிக்குரிய கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. பரமக்குடியில் ஆரம்பித்து கூடங்குளம் வரை நீண்டு செல்லும் ஜெயலலிதா அரச பாசிசத்திற்கு பார்பனீயம் துணைக்கு அழைக்கப்படுகிறது.