Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராமதாஸ் விடுதலை கோரி தி.மு.க பாரதீய ஜனதா ஓரணியில்

bjpபா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மீது கடந்த 2012ல் நடந்த வழக்குகளை தூசிதட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரச்னை ஏற்பட்ட போது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு தற்போது ராமதாசை மீண்டும் கைது செய்வது சரியானதல்ல. அவரை மனிதாபிமான முறையில் விடுதலை செய்யவேண்டும் என மாநில பா.ஜ., தலை வர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் கூறி னார்.
சாதி வெறியைத் தூண்டியதற்காக பா.ம.க நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்ட ஒழுங்குப் பிரச்சனையைக் காரணம்காட்டி கைது செய்துள்ளது தமிழக அரசு. ஜெயலலிதாவுடன் தேர்தல் உடன்படிக்கை உருவாகுமானால் ராமதாஸ் மீண்டும் அ.இ.அ.தி.மு.க மேடைகளில் முழங்கக்கூடும். அகில இந்திய ஆதிக்க சாதி வன்முறையாளர்களான பாரதீய ஜனதாக் கட்சியைப் போன்றே கருணாநிதியும் மனிதாபிமான அடிப்படையில் ராமதாசை விடுதலை செய்யக் கோரியுள்ளார்.

Exit mobile version