கடந்த பல ஆண்டுகளாகவே பலவீனமாகி விட்டதாகச் சொல்லப்பட்டு வந்த இந்திய மாவோயிஸ்ட் கொரோல்லா படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 22 பேர் பலியாகி உள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேலும் இத்தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ராணுவம் புலனாவுத்துறையிலும் உத்திகள் ரீதியாகவும் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.மத்திய இந்தியாவின் காடுகளில் தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டுகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அவ்வபோது தாக்குதல் நடக்கும் அவைகள் செய்திகளாகவும் வரும். ஆனால் 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்படியான ஒரு தாக்குதலை மாவோக்கள் நடத்தியிருப்பது இதுவே முதன்முறை.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூரில் தேடுதல் வேட்டையின் போது மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரத்தில் இருக்கும் பிஜாபூர் மற்றும் சுக்மா மாவட்டத்தில் இருக்கும் தெக்லகுடம் என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த இடம் மாவோயிஸ்டுகளின் கோட்டை போல கருதப்படுகிறது. மாத்வி ஹித்மா என்ற மாவோயிஸ்ட் தலைவர் கட்டுப்பாட்டில் இங்குள்ள கொரில்லா குழுக்கள் செயல்படுகின்றன. 2010-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை முன்னின்று நடத்திய மாத்வி ஹித்மாவின் அந்த தாக்குதலில் 76 ராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அதன் பின்னரே அவர் கவனிக்கப்பட்டார்.
முக்கிய தலைவரான ஹித்மா தெக்லகுடம் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைக்க பல நூறு ராணுவத்தினர் அந்த கிராமத்தை முற்றுகையிடுகிறார்கள். ஆனால் அவர்களை வருவதை அறிந்து கொண்ட மாவோயிஸ்டுகள் அவர்களை உள்ளே வரவிட்டு சுற்றி வளைத்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரம் கழித்துதான் நாம் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் பொறி முறைக்குள் சிக்கியிருக்கிறோம் என்பதை ராணுவத்தினர் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தப்பிச் செல்ல முடியாதபடி சுற்றி வளைத்து தாக்கியிருக்கிறார்கள்.
ராணுவத்தினரின் உடல்கள் கிராமங்கள் முழுக்க சிதறிக் கிடந்திருக்கின்றன.
க்கி சூட்டில் மாவோயிஸ்டுகளுக்கு காயம் அடைந்து அதில் தங்களுடைய சகாக்களுடன் அவர்கள் டிரக்குகளில் தப்பிச் சென்றார்களா? அது நடக்கும்போது மற்ற வீரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் போன்ற பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன.பல மணி நேர தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்த மாவோயிஸ்டுகளை அவர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்ற பின்னர் இறந்த ராணுவத்தினரின் ஆடைகள், ஆயுதங்கள், செல் போன்கள் உட்பட எந்த பொருளையும் விடாமல் மாவோயிஸ்டுகள் எடுத்துச் சென்றனர். பகல் 12 மணிக்கு துவங்கிய தாக்குதல் பிற்பகல் 3-30 வரை நீடித்திருக்கிறது.இத்தாக்குதலில் நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், மோட்டார்குண்டுகளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அந்த கிராமத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர் வீடு வீடாக சோதனை செய்தனர். ஆனால் அவர்களால் ஒரு மாவோயிஸ்டுகளைக் கூட பிடிக்க முடியவில்லை. ஆனால் மாவோயிஸ்டுகளோ ஒரு ராணுவத்தினரை பிணையக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் சத்தீஸ்கரில் ஆட்சியை பிடித்துள்ளது அங்கு பூபேஷ் பாகெல் முதல்வராக உள்ளார். இத்தாக்குதல் அவருக்கு பாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், ஜிராம் பள்ளத்தாக்கு சம்பவம் என்பது பஸ்தார் பகுதியில் 2013ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட 29 பேர் கொல்லப்பட்ட சம்பவமாகும். அதுதான் மாவோயிஸ்டுகளின் வரலாறிலேயே நிகழ்த்தப்பட்ட அரசியல் தலைவர்களை இலக்கு வைத்த மிகப்பெரிய தாக்குதலாக அறியப்படுகிறது. அதன் பின்னர் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் இதுவே.
மத்திய இந்தியாவின் காடுகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ள நிலையில் மிகப்பெரிய பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாகும் பழங்குடி மக்களின் பிரதேசங்களே மாவோயிஸ்டுகளின் ராணுவ மையமாக மாறியுள்ளது.இன்னும் மாவோயிஸ்டுகள் ராணுவ ரீதியாக வலுவாக இருப்பதையும் அவர்களின் கட்டமைப்புகள் இன்னும் வலுவோடு இருப்பதையுமே இத்தாக்குதல் காட்டுகிறது.
தாக்குதல் நடந்த இடத்திற்கு திட்டமிட்டு ராணுவத்தினரை வரவழைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ள புதிய முறை அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.