Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராணுத்தினர் அம்பலவான்பொக்கனை நகருக்குள் பிரவேசித்துள்ளனர்

வன்னி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுத்தினர் நேற்று மாலை அம்பலவான்பொக்கனை நகருக்குள் பிரவேசித்துள்ளனர்.

வன்னி படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 58 வது படைப்பிரிவினரே தமது நடவடிக்கையின் தொடர்ச்சியாக முன்னேறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்திற்குள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ராணுவத்தினர் அதன் தொடர்ச்சியாகவே அம்பலவான்பொக்கனை நகருக்குள் பிரவேசித்துள்ளதாகவும் புலிகளின் மறைவிடங்களை சோதனையிடும் நடவடிக்கைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version