Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘ராஜ்’ இன் இறுதி நாட்கள்?

rajapaksaராஜ் இன் இறுதி நாட்கள் -Last days of the Raj?- என்ற கட்டுரை ஒன்றை The Economist வெளியிட்டுள்ளது. இலங்கையின் உள்ளூர் நிலைமைகளுக்கு அப்பால் ஏகாதிபத்தியங்களாலும் அதன் துணைக் கூறுகளாலும் தேர்தல் மிக அவதானமாகக் கையாளப்படுகிறது. ஈகொனமிக்ஸ் மட்டுமல்ல, பைனான்சியல் ரைம்ஸ் போன்ற அனைத்துப் ஏகாதிபத்திய ஊடகங்களும் ராஜபக்சவின் வீழ்ச்சி தொடர்பான கட்டுரைகளை வரைந்துள்ளன.

இரண்டு ஆட்சிக்காலத்திலும் அடிமட்ட மக்களோடு மட்டுமன்றி தனது இரண்டாவது அணியுடனும் தொடர்புகளை இழந்து போன ராஜபக்ச அதிகாரம் பொதுவாகத் தனது பாசிசக் கட்டமைப்பை இழந்துள்ளது. ராஜபக்ச பாசிசத்தின் உறுதியான தூண்களாகவிருந்த பலர் இன்று எதிரணியில். கடந்த வருடங்களில் இவர்களோடு தொடர்புகளை வளர்த்துக்கொண்ட ஏகாதிபத்தி அரசுகள் ராஜபக்சவை முடிவிற்குக் கொண்டுவரத் தீர்மானகரமாகச் செயற்படுகின்றன.

இதன்காரணமாக ராஜபக்ச பேரரசு அச்சமடைய ஆரம்பித்துள்ளது. வேறு வழிகள் அற்றுப்போன நிலையில் கிடைத்த சொத்துக்களைச் சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்கு வந்துள்ளதாகச் சில எதிரணி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாக்குகளை கணணியின் ஊடாக மாற்றும் வேலையில் ராஜபக்சவின் அரசு சார்ந்தவர்கள் இறங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இலங்கையின் தேர்தல் அமைப்பு முறையைப் பொறுத்தவரை பலமான எதிரிக்கு எதிராக வாக்குகளை மாற்றுவது என்பதைப் பாரிய அளவில் மேற்கொள்ள முடியாது என்பது தெரிந்த விடையம்.

ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பலரால் ஒவ்வொன்றாக எண்ணப்படும் வாக்குச் சீட்டுக்கள் ஐம்பது கட்டுக்களாகக் கட்டப்பட்டு அனுப்பப்படும். அந்த எண்ணைக்கை தொடர்பான பதிவுகள் கூட ஊள்ளூர்ச் சாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம். ஊழல் நடைபெற்றாலும் ஐந்து வீதத்திற்கு மேல் நடத்த முடியாது என தேர்தல் நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்ட வேளையில் தெரிவித்தார்.

உலக அளவில் கோத்தாபயவின் தனியார் கப்பற்படை காணப்படுவதால் ராஜபக்ச குடும்பம் பாதுகாப்பாகத் தப்பிச் செல்வதற்கான வழிகள் காணப்படுவதாகவே பலர் கருதுகின்றனர்.

http://www.economist.com/news/leaders/21637389-encouragingly-mahinda-rajapaksa-faces-real-battle-win-re-election-president-better

Exit mobile version