நேற்று சென்னை மந்தை வெளியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல கோஷ்டிகளில் ஒன்றாக ப.சிதம்பரம் கோஷ்டி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. சுமார் 150 பேர் காசும் பிரியாணியும் கொடுத்து அழைத்து வரப்பட்ட நிலையில் வந்தவர்கள் அனைவருக்குமே இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது அவர்களும் அதை வாங்கி விட்டு செல்ல முடியாமல் கார்த்தி சிதம்பரத்தின் பேச்சை அமர்ந்து கேட்டனர். நேற்றைய கூட்டத்தில் கார்த்தியின் உளறல் இது. “இலங்கைப் பிரச்னை குறிóத்து காங்கிரஸ் கட்சி மெüனமாக உள்ளது. ராஜீவ் காந்தி என்ன செய்தார், காங்கிரஸ் கட்சிதான் என்ன செய்தது என்று குறை கூறுகின்றனர். இலங்கையிóல் தமிழர்கள் பாதிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ளது போன்று தனித்தனி மாநிலமாக இலங்கையிலும் செயல்பட வேண்டுóம் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். இதுதான் ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா உடன்பாடு. ஆனால் தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட விடுதலைப் புலிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் செல்வாக்கு பிரபாகரனுக்கு இருந்திருந்தால் அவர் தமிழர் பகுதிக்கு முதலமைச்சராகி இருப்பார். ஆனால் இதை விடுத்து, தனி நாடு கோரிக்கை ஏற்புடையது அல்ல. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன. அவை தனி நாடு கோரிக்கை விடுத்தால் நாம் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஆனால் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ராஜீவ் காந்தி ஆதரவு அளிக்காததால் அவரை 1991-ல் படுகொலை செய்தனர். இதை நாம் எப்படி மன்னிக்க முடியும்? திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் யாருக்காவது இது போன்ற கதி ஏற்பட்டிருந்தால் யாராவது மன்னிப்பார்களா? 1967-களில் காங்கிரஸ் கட்சிமீது பல்வேறு அவதூறுகளைக் கூறித்தானே திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. நான் இப்போது தேர்தல் கூட்டணி குறித்துப் பேசவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது, ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது.