விருதுநகர் மாவட்டத்தில் நடந்த காமரஜார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே இத்தகவலை வெளியிட்டுள்ளார். ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். அவர் ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை–இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் 2 மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார். ஆனால் நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்’’ ” என்று உயிரிழப்பு ஏதோ இயர்க்கைப் பேரிடரைப் போலப் பேசியுள்ளார். இலங்கையின் குற்றச் செயல்களில் இந்தியாவுக்கும் குறிப்பாக ப.சிதம்பரத்திற்கும் தொடர்புண்டு என்பது குறிப்பிடத் தக்கது.