Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜீவ் காந்தி கொலை – இந்திய அதிகார வர்க மாபியாக்கள் – வீடியோ மறைக்கப்பட்டது

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் n;தாடர்பில் கே. ராகுதாமன் என்ற சீ.பி.ஐ. அதிகாரி புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை உளவுத்துறை முன்னாள் தலைவர் எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாக, அப்போதைய தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் குற்றம்சா‌ற்‌றியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே ராஜீவ் கொலை வழக்கு, மர்மம் விலகும் நேரம் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது மற்றொரு புதிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களிலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டு விட்டது என்பதுதான்!
ரகோத்தமன் எழுதியுள்ள சிபிஐ கோப்புகள் முதல் – ராஜீவ் காந்தி கொலை செய்ய சதி (Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files) என்ற புத்தகத்தில், ராஜீவ் கொலை சம்பவத்தின்போது அங்கிருந்த உளவுத்துறையின் வீடியோ கிராபர் அதனை படம்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த வீடியோ காணாமல் போய்விட்டதாகவும், எம்.கே. நாராயணனை அப்போதைய சிறப்பு புலனாய்வு குழு தலைவர் டி.ஆர். கார்த்திகேயன் தப்பவிட்டு விட்டதாகவும் ரகோத்தமன் கூறியுள்ளார்.
மேலும், 1991, மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு ராஜீவ் வந்தபோது, மனித வெடிகுண்டாக வந்த தாணு பாதுகாப்பு வளையத்திற்குள் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ராஜீவ் வருவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே தாணு உள்ளிட்ட அவரது குழுவினர் அந்த இடத்தில் காத்திருந்ததாகவும் ரகோத்தமன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி கருணாநிதியும், ஸ்ரீபெரம்பத்தூரில் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்ததகாக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கருணாநிதி ஏன் இந்தக் கூட்டத்தை ரத்து செய்தார் என்பது பற்றி இதுவரையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரம்பத்தூர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என கருணாநிதி ஆலேசானை வழங்கியிருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கார்;த்திகேயன் என்ற அதிகாரி இது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டாம் என தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version