Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபட்சே வருகை – சென்னையில் எதிர்த்தார்… டில்லியில் சந்திக்கிறார் திருமாவளவன்.

இலங்கை அதிபர் ராஜபட்சே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசுமுறைப் பயணமாக நேற்று மாலை புது டில்லி வந்துள்ள ராஜபட்சேவுக்கு இன்று சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து முப்படை அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்படுகிறது பின்னர் திமுக ஆதரவு எம்.பிக்கள் அவரைச் சந்தித்து மீள்கட்டுமானம் குறித்துப் பேசுகிறார்கள். இதற்கான நேரம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு தலைமையில் இந்த எம்பிக்கள் ராஜபட்சேவை சந்திக்கும் போது செம்மொழி மாநாட்டுக்கான அழைப்பிதழும் அவருக்கு வழங்குவார்கள் என்று தெரிகிறது. அவரும் வந்து செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாலும் ஆச்சரிப்பட ஏதும் இல்லை. என்கிற நிலையில் திமுகவின் எம்.பியும் தொழிலதிபருமான டி.ஆர் பாலு தலையில் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், .கே.எஸ்.விஜயன், .ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி. காங்கிரஸ் –மணி சங்கர் ஐயர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணிக் தாகூர், ஜெயந்தி நடராஜன், .எம்.சுதர்சன நாச்சியப்பன், பி.எஸ்.ஞானதேசிகன். விடுதலைச் சிறுத்தைகள் – தொல்.திருமாவளவன்.ஆகியோர் சந்திக்கின்றனர்.

திருமாவளவனின் இரு நாள் நாடகம்

நேற்று தமிழகம் முழுக்க பல் வேறு தமிழ் அமைப்புகளும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் பல் வேறு போராட்டங்களை நடத்தினர். அரசின் தடையையும் மீறி இப்போராட்டம் தமிழகமெங்கிலும் எழுச்சியோடு நடந்தது. விடுதலைச் சிறுத்தைகளும் கொலைகார ராஜபட்சே இந்தியா வருவதை எதிர்ப்பதாகத் தெரிவித்து போராட்டம் நடத்தி சம்பிரதாயமாக கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாலையில் விடுதலையான கையோடு திருமாவளவன் இரவே டில்லி கிளம்பிச் சென்றுள்ளார். ராஜபட்சேவை சந்தித்து இன்னொரு முறை பொன்னாடை போர்த்தி வரவேற்று பின்னர் மறுகுடியேற்றம், மீள்கட்டுமானம் தொடர்பாக சம்பிரதாயப் பேச்சுகளை நடத்துவார்கள் என்று தெரிகிறது. திருமாவளவன், ரவிக்குமார், ஜெகத் கஸ்பர் ராஜ், சுப.வீரபாண்டியன் ஆகியோர் யாரை ஏமாற்ற இந்த நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

 

Exit mobile version