Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபட்சேவுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு உச்சபட்ச மரியாதை.

உலகெங்கிலும் உள்ள பல் வேறு மனித உரிமை அமைப்புகளால் இனக்கொலையாளி என அடையாளம் காட்டப்பட்ட பயங்கரவாத இலங்கை அரசின் அதிபரான ராஜபட்சேவுக்கு இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் வரவேற்பளித்ததோடு இந்திய ஜனாதிபதி பிரதமர் கலந்து கொள்ள அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காந்தியின் போதனைகள் அடங்கிய வாழ்த்தட்டையும் பரிமாறப்பட்டது.

ராஜபட்சேவுடன் கிரிமினல் குற்றவாளியான டக்ளஸ் தேவான்ந்தாவும் கலந்து கொண்டார். காந்தியின் சமாதிக்குச் சென்ற இவர்கள் அங்கெ மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்தியப் பிரதிநிதிகளும் இலங்கைப் பிரதிநிதிகளும் சந்தித்து வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்துப் பேசினார்கள். இதில் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா எதுவுமே பேசவில்லை. முழுக்க முழுக்க இந்திய பெரு முதலாளிகளின் வர்த்தக நலன்கள் முதலீடுகள் தொடர்பாகவே பேசப்பட்டது. இன்று மாலை கருணாநிதியின் தூதுவர்கள் ராஜபட்சேவைச் சந்தித்து தமிழர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக உள்ள பல் வேறு மனித உரிமை அமைப்புகளால் இனக்கொலையாளி என அடையாளம் காட்டப்பட்ட பயங்கரவாத இலங்கை அரசின் அதிபரான ராஜபட்சேவுக்கு இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் வரவேற்பளித்ததோடு இந்திய ஜனாதிபதி பிரதமர் கலந்து கொள்ள அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காந்தியின் போதனைகள் அடங்கிய வாழ்த்தட்டையும் பரிமாறப்பட்டது. ராஜபட்சேவுடன் கிரிமினல் குற்றவாளியான டக்ளஸ் தேவான்ந்தாவும் கலந்து கொண்டார். காந்தியின் சமாதிக்குச் சென்ற இவர்கள் அங்கெ மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்தியப் பிரதிநிதிகளும் இலங்கைப் பிரதிநிதிகளும் சந்தித்து வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்துப் பேசினார்கள். இதில் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா எதுவுமே பேசவில்லை. முழுக்க முழுக்க இந்திய பெரு முதலாளிகளின் வர்த்தக நலன்கள் முதலீடுகள் தொடர்பாகவே பேசப்பட்டது. இன்று மாலை கருணாநிதியின் தூதுவர்கள் ராஜபட்சேவைச் சந்தித்து தமிழர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளிப்பார்கள் என்று தெரிகிறது.

Exit mobile version