Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ஷ சிறந்த சிறந்த தலைவர் : கருணா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்த முறையில் நாட்டை வழிநடத்திச் செல்லும் ஒரு சிறந்த தலைவரெனவும், இதன்காரணமாகவே தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளத் தீர்மானித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1983 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இராணுவத்தினரைக் கொன்றதையடுத்தே இராணுவத்தினரும் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.

தற்போது 99 சதவீதமான நிலப்பரப்புக்களை இராணுவத்தினர் கைப்பற்றி விட்டனர். எஞ்சிய நிலப்பரப்பும் விரைவில் கைப்பற்றப்பட்டு விடும்.

முல்லைத்தீவில் தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் மாத்திரமே உள்ளனர். புலிகளின் தலைவரும் குறித்த பிரதேசத்திலேயே உள்ளார்” என்றார்.

Exit mobile version